சீனி கொள்வனவு செய்யும் போது எச்சரிக்கை!

0
189

பல்பொருள் அங்காடிகளில் சீனி வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிகப்பு சீனியுடன் வெள்ளை சினி கலக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து வர்த்தக விவகார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 220 ரூபா எனவும், சிகப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 360 ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை சீனியுடன் சிகப்பு சீனியை கலந்து கூடிய விலைக்கு சிகப்பு சீனி என விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிகப்பு சீனியை கொள்வனவு செய்ய மக்கள் நாட்டம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால், ஒவ்வொரு பல்பொருள் அங்காடிக்கு எதிரிலும் போராட்டம் நடத்த நேரிடும் என அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here