சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம்

0
173

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஹலவத்தை முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் பகுதியில் தேதுறு ஓயாவில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள்,மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 7 வயது மதிக்கத்தக்க மகள், 6 வயது சிறுவன் மற்றும் 35 வயதுடைய தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஹலவத்தை முகத்துவாரத்திற்கு படகில் சென்ற இவர்கள் படகில் இருந்து இறங்கி அங்கு நீராட சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here