வட்டகொடையில் தடைப்பட்ட மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து வழமைக்கு.

0
103

வட்டகொட பகுதியில் தடைப்பட்ட மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து வழமைக்கு. திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டியிலிருந்து நேற்று (05) திகதி நானுஓயா நோக்கி புறப்பட்டு சென்றுகொண்டிருந்த புகையிரதம் வட்டகொடைக்கும் தலவாக்கலைக்கும் இடையில் தலவாக்கலையிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலை நேற்று மாலை 5.30 மணியளவில் தடம்புரண்டது.
இதனால் மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டன.கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டு வந்த புகையிரதம் தலவாக்கலையிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த புகையிரதம் நானுஓயாவிலும் நிறுத்தப்பட்டு பல மணித்தியாலங்கள் தாமதமாகின இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்நிலையில் தடம்புரள்வுக்கு உட்பட்ட புகையிரதத்தினை தண்டவாளத்தில் அமர்த்தும் பணிகளை புகையிரத ஊழியர்கள் இரவு முழுவதும் சரிசெய்வதற்கு எடுத்த முயற்சியின் பயனாக இன்று (06) அதிகாலை இரண்டு மணியளவில் வழமைக்கு திரும்பியதாக புகையிரத திணைக்களத்தின் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்ததுள்ளது.

தற்போது மலையகத்திற்கான புகையிரத சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருவதாக புகையிரத திணைக்களத்தின் கட்டுப்பாட்டு நிலையம் மேலும் அறிவித்துள்ளது

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here