“ஜனநாயகன்” படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியீடு!

0
1
dailythanthi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலில் முழு கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 23-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இணையத்தில் கசிந்தும் வசூலில் மாஸ்
வெளியீட்டுக்கு முன்பும், வெளியான பிறகும் பல்வேறு சவால்களை சந்தித்த ‘ஜனநாயகன்’, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. இருப்பினும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற காரணத்தால் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுவரை படம் ரூ.250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீக்கப்பட்ட 6 காட்சிகள்
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 6 காட்சிகள் இறுதிக்கட்ட எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

என்னென்ன காட்சிகள்?
சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் எச். வினோத், நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், விஜய் இடம்பெற்ற 2 ஜாலியான காட்சிகள், 2 ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் 2 சென்டிமென்ட் காட்சிகள் இறுதிப் பதிப்பில் இடம்பெறவில்லை என்றும், அந்த காட்சிகளை விரைவில் ரசிகர்களுக்காக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here