ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்த மாணவி துடிதுடித்து பலி! நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி

0
136

திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெந்நீரிலேயே மயங்கி விழுந்துள்ளார். தமிழகத்தில் ஜலதோஷத்துக்காக ஆவி பிடித்த மாணவி வெந்நீர் பானைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள பூமங்கலம் கிராமத்தை சேர்ந்த கௌசல்யா, தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

சில நாட்களாக ஜலதோஷத்தால் அவதிப்பட்ட அவர் வெந்நீரில் மருந்து கலந்து ஆவி பிடித்தார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெந்நீரிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

அருகில் யாரும் இல்லாததால், சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வெந்நீர் பானைக்குள் தலை மூழ்கிய நிலையில் கௌசல்யா கிடந்துள்ளார்.

அதன்பிறகு, அங்கு வந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

தகவல் அறிந்து வந்த பொலிஸார் கௌசல்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here