அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங்க் வலையில் சிக்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தூதுவரின் ஆலோசனையின் பேரில் தவறான முடிவுகளை எடுத்ததாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.நேற்று (11) இடம்பெற்ற வட இலங்கை கூட்டமைப்பின் கேகாலை மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
“.. கோட்டாபய ராஜபக்ஷ செய்த மற்றைய பெரிய தவறு தான் கொழும்பில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜூலியாவின் பேச்சுக்களை கேட்டு அதற்க்கு அடிமையாகி இருந்தமை. ஜூலியா அம்மையார் கடந்த காலங்கள் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் சந்தித்து வந்தார். அவற்றினை யாரும் கூற மாட்டார்கள் அதனை சொல்வதற்கும் பயம். கூறினால் ஈதும் நடந்து விடும் என்ற பயம்.
மிரிஹான வீட்டினை சுற்றி வளைத்து அடித்த நாள் உங்களுக்கு நினைவிருக்கும். அன்று இரவு ஜூலியா அம்மையார் மிரிஹான வீட்டிற்கு வருகிறார். வந்து கூறுகிறார் மிஸ்டர் பிரசிடன்ட், உங்களுக்கு இவ்வாறு நடந்ததையிட்டு நான் பெரிதும் வருந்துகிறேன். நீங்கள் ஒரு பௌத்தர், நான் கத்தோலிக்கர். எனது நம்பிக்கையின் கீழ் பிரார்த்தனை செய்ய எனக்கு இடமளியுங்கள் எனக் கூறி மண்டியிட்டு ஜூலியா அம்மையார் இறைவனிடம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரார்த்திக்கிறார், ஆமீன்..
கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த நாள் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் கூறுகிறார், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவரை பாருங்கள், நல்லவராக இருக்கிறார். இப்படிச் சம்பவம் ஒன்று நேற்று நடந்தது.. வீட்டிற்கு வந்து எனக்காக பிரார்த்தித்தார். யாரு இப்படிச் செய்வார்கள்?, அன்று ஆரம்பித்த காதல் தான் அடுத்த நாள், மறுநாள், அதற்கும் அடுத்த நாள் என இவ்வாறு தொடர்ந்தது..
ஏதும் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது, இருவரும் கதைத்துத் கொண்டார்கள், இருவருக்குள்ளும் கதைகள் தீர்மானங்கள் பரிமாறப்படுகின்றன. IMF இற்கு செல்ல வேண்டாம் என்கிறார், பிரச்சினைகள் எழும் என்கிறார், அம்மையாரின் பேச்சில் மயங்கி அதனை செய்யாது ஆமோதிக்கிறார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் உள்ளவர்களை அகற்றவா போகிறீர்கள் எனக் கேட்கிறார்.. கோட்டாபய ஆம் என்று கூறுகிறார், உடனே அதனை செய்ய வேண்டாம்.. அப்படிச்செய்தால் IMF செயற்திட்டங்கள் வீணாகும் என்கிறார். அப்படியென்றால் அவ்வாறு செய்யாது இருக்கிறேன் என்கிறார். ஒரு பக்கம் நாட்டின் ஜனாதிபதியை ஆட்டிவைத்தார், மற்றைய பக்கம் ஆர்ப்பாட்டத்தினை ஆதரித்தார்..”