தமிழகத்திலிருந்து தோழமைக் குரல் எழுப்பிய தொல்திருமாவளவனுக்கு இ.தொ.கா நன்றி!

0
119

மலையக மக்களினதும், அதன் மாபெரும் தலைவரினதும் உணர்வுகளையும், உள்ளத்துடிப்பையும் புரிந்து கொண்டு தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் தனது குரலைப் பகிரங்கமாக உயர்த்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவனுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் அமரர் தொண்டமானின் பெயர் நீக்கம் தொடர்பில் தலைவர் தோழர் தொல்திருமாவளவன் ஊடகங்களுக்கு விடுத்த எதிர்ப்பு அறிக்கைக்கு நன்றி தெரிவித்து இ.தொ.கா ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதை விட, எங்கோ இருந்து கொண்டு உண்மையின் உணர்வலைகளை தட்டிக் கேட்கத் தயங்காத தமிழகப் புரட்சித் தலைவர் தோழர் தொல்திருமாவளவனின் நடவடிக்கைகள் எமது பணிகளுக்கு மேலும் தெம்பூட்டுகின்றது. உண்மை ஒரு போதும் உறங்கி விடாது என்பதற்கு தமிழர்களின் இதயத்தில் என்றும் நீங்காத இடம் பிடித்திருக்கும் அமரர் சௌமியமூர்;த்தி தொண்டமான் அன்று கூறிய அவரது வாக்கு இன்று தெய்வீக வாக்காக நிருபணமாகி வருகின்றது.

அமரர் தொண்டமானின் பெயரை யார் நீக்கினார்களோ, அந்தப் பாவத்தின் விளைவு அவர்களுக்கு சாபமாக மாறிவிடும். இப்போது படிப்படியாக அவர்களுக்கு பயம் பதறிக் கொண்டு வருவதையும் நாம் அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

எவ்வாறாயினும் இலங்கையில் மாத்திரமல்லாது எங்கெல்லாம் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தோழர் தொல்திருமாவளவனின் உணர்ச்சிக் குரல் அங்கெல்லாம் சென்று துயர் துடைக்கும் என்பதில் நாம் நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றோம். உங்கள் பணி சிறக்க இந்திய வம்வாசளி மக்கள் சார்பில் எமது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

தேவதாஸ் சவரிமுத்து
ஊடக இணைப்பாளர்

இதொகா .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here