தலவத்துகொடையில் பயண முகவர் நிலையத்தில் பணம், நகைகள் கொள்ளை!

0
44
nst

தலவத்துகொடை பகுதியில் அமைந்துள்ள பயண முகவர்  நிலையம் ஒன்றினுள் காரில் வந்த நால்வர் கொண்ட குழு நுழைந்து, சுமார் 65 மில்லியன் ரூபா பெறுமதியான பண தொகை மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகத் தலங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

virakesari

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here