தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

0
81

பழங்களிலேயே வருடம் முழுவதும் விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழமானது பெரும்பாலானோரின் விருப்பமான பழமும் கூட. நிறைய பேருக்கு தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

வாழைப்பழத்தில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன.தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு தேவையான 1500 கிலி பொட்டாசியம் கிடைக்கிறது மற்றும் ஏராளமான நன்மைகளும் உடலுக்கு கிடைக்கின்றன.

இதய ஆரோக்கியம் மேம்படும்

நார்ச்சத்து அதிகமான உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் அந்த நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன.

நார்ச்சத்து அதிகமான உணவுகளை உண்பது, இதய நோயின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடும் போது இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு இதய நோயின் அபாயமும் குறைகிறது.

செரிமானம் மேம்படும்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்து உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து.

ஏனெனில் இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.வாழைப்பழத்தை சாப்பிடுவது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது.

அதுவும் வாழைப்பழத்தை காலை உணவின் போது உட்கொண்டால், உடல் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.

உடல் எடை கட்டுப்படும்

வாழைப்பழமானது ஒருவரது பசியை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. வாழைப்பழத்தின் இனிமையான சுவை மட்டுமின்றி வாசனை பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

மன அழுத்தம் குறையும்

ஒரு மிதமான அளவிலான வாழைப்பழத்தில் 27 மிகி மக்னீசியம் உள்ளன. இந்த கனிமச்சத்து மனநிலையை மேம்படுத்துவதோடு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 420 மிகி மக்னீசியமும், பெண்களுக்கு 320 மிகி மக்னீசியமும் தேவை.

உடலில் மக்னீசியம் குறைவாக இருக்கும் போது தான், ஒருவர் மிகுந்த பதட்டம், எரிச்சலுணர்வு, மன இறுக்கம் மற்றும் பிற மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஆகவே மனநலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here