திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

0
45

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பவுர்ணமி என்பதால் கடற்கரைக்கு இறங்கும் படிக்கட்டு அருகே கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. எனினும் பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் புனித நீராடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here