திருமணம் முடித்து 21 நாட்களே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவமொன்று ராகலை கோனபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ராகலை கோனபிட்டியை சேர்ந்த செல்வராஜ் பிரியதர்ஷினி என்ற 28 வயதான இளம் பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பியபோது அவரது புது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.