தென்கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா – அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயார்நிலை

0
93

தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லைப் பகுதிகளில் வடகொரியா பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

எனினும் இந்த அச்சுறுத்தும் செயற்பாட்டிற்கு அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்கத் தயார் என தென்கொரியா கூறியுள்ளது.

அமெரிக்க – தென் கொரிய இராணுவத்தினரின் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் வடகொரியா, தென் கொரிய எல்லைகளை குறிவைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து இன்று வடகொரிய இராணுவம், பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இது கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வடகொரியாவுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரிய இராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதில் கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தென் கொரிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here