ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை மினுவங்கொடை நீதவான் 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய, கேஹல்-எல்ல பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடிய நபருக்கு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கேஹல்-எல்ல பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தைக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை மினுவங்கொடை நீதவான் 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.குறித்த 10 வருடங்களை நன்னடத்தையுடன் கழிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில், குறித்த நபர் 1200 ரூபா பெறுமதியான 20 தேங்காய்களை திருடியதாக பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் இத்தண்டனையை அறிவித்தது.