60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகர்

0
88

இவர் ராஜோஷி பவருவா என்பவரை முதல் திருமணம் செய்திருந்தார்.பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தில், கில்லி, உத்தமபுத்திரன், ஈ, என்னை அறிந்தால் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் ஆஷிஷ் வித்யார்த்தி.

இவர் ராஜோஷி பவருவா என்பவரை முதல் திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் தம்பதிகளின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தனது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து ஆசிஷ் வித்யார்த்தி கூறும்போது, “எனது வாழ்வில் இந்த நிலையில் ரூபாலியை திருமணம் செய்துள்ளது அசாராதாரண உணர்வை தருகிறது. காலையில் இந்த பதிவுத்திருமணம் நடந்தது” என கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here