தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் நடப்பு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விசேட கலந்துரையாடல்

0
98

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் நடப்பு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.

கொழும்பு, இரத்மலானையில் உள்ள நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் நடைபெற்ற கொடையாளர் இணைப்புக் கூட்டத்தில், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, JICA, AFD, UNDP ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

நீர் வழங்கல் அமைச்சால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், முன்னெடுக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உதவித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்பட்டன.தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரச்சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க வரவேற்புரை நிகழ்த்தி, நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின்னர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொடையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

இதனைத்தொடர்ந்து சவால்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் உட்பட பல தலைப்புகளின் கீழ் விளக்கமளிப்புகளும், கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here