நாடு மீண்டும் வங்குரோத்து அடையும் அபாயத்தில்!

0
2

நாட்டில் தற்சமயம் பிரச்சினைகள் இல்லை என்று காட்டிக் கொள்வதற்கு ஜனாதிபதி நாடு முழுவதும் சுற்றி வந்து, நாட்டில் போதிய அளவுக்கு டொலர்கள் கையிருப்பில் காணப்படுவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் இன்று நாடு எதிர்கொள்ளும் ஆபத்தான நிலை தொடர்பில் பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். இது பற்றி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து யதார்த்தமான, உண்மையான புரிதல் மக்கள் மத்தியில் காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி, நாட்டின் கையிருப்பு 7 பில்லியன் டொலர் காணப்படுகின்றன என்கிறார். இதில் காணப்படும் சீன யுவான்களை பயன்படுத்த முடியாது என்பதால் உண்மையான கையிருப்பு டொலர் 7 பில்லியனுக்கும் குறைவாகவே காணப்படுகின்றன. இதன் ஆபத்தான நிலை என்னவென்றால், உலகம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒரு நாட்டின் கையிருப்பானது 3 மாத இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் விதமாக அமைந்து காணப்பட வேண்டும். என்றாலும் நமது நாட்டில் தற்சமயம் இந்நிலை இல்லை.

நாட்டின் மாதாந்த இறக்குமதிச் செலவு அமெரிக்க டொலர் 2 பில்லியன் ஆக காணப்படுகின்றன. இந்த வேகத்தில் 3 மாத இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் கையிருப்பு கூட நாட்டில் தற்சமயம் இல்லை. இந்த தகவல்கள் இருந்தும் அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுகிறது. எமது கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளையே செய்ய வேண்டும். இந்த 3 மாத கையிருப்பு என்பது குறைந்தபட்ச அளவே என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசிரியர் சங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இன்று (24) ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்
மெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

🟩 மத்திய கிழக்கு யுத்தத்தால் நாட்டுக்கு ஏற்படும் தாக்கத்தையும் சிந்திக்க வேண்டும்.

அதோடு, நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பல் 8 பில்லியனாக அதிகரித்தாலும், மத்திய கிழக்கு யுத்தம் தொடர்ந்து நீடித்தால் அல்லது மோசமடைந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய கிழக்கு பொருளாதாரம் சரிந்தால் தொழிலாளர்களின் வேலைகள் இழக்கப்படும். இது தொடர்பில் அரசாங்கம் இன்னும் வாய் திறந்த பாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 முன்பு நமக்கு உதவிய நாடுகளால் இன்று உதவ முடியாமல் போகிறது

2022 கொரோனா காலத்திலும் உலகில் இந்தியா போன்ற நாடுகள் நமக்கு உதவி செய்தன. இப்போது இருக்கும் பொருளாதார பிரச்சினைகளால் நமது நாட்டுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

இந்தியாவின் மோடி பிரதமர் அவர்கள் கூட தனது நாட்டு மக்களை சரியாக விழிப்புணர்வூட்டியிருந்தாலும், நமது நாட்டில் இன்னும் அத்தகைய விழிப்புணர்வூட்டல் நடைபெறவில்லை. இந்த உண்மை நிலை, யதார்த்தம் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 மக்கள் இந்த யதார்த்தத்தை அறிந்திருக்க வேண்டும்

2022 இல் வங்குரோத்தடைந்த சமயத்தில் 92 ரக பெட்ரோல் ரூபா 470 ஆக காணப்பட்டது. தற்சமயம் இந்த ரக பெட்ரோலின் விலை ரூ.410 ஆக காணப்படுகின்றது. இந்த இலக்கங்கள், தரவுகளை பார்க்கும்போது மக்களுக்கு உண்மை நிலை புரிந்திருக்க வேண்டும். 2027 மார்ச் மாதத்தில் IMF இணக்கப்பாடு முடிவுக்கு வருகின்றது. இதனால் ஏற்படும் தாக்கமும் மேலும் அதிகமாகும். இது நாட்டின் தரவரிசைகளையும் பாதிக்கும் விதமாக அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 தொடர்ச்சியான அடுத்த கட்ட IMF இணக்கப்பாடு.

2027 இல் IMF இணக்கப்பாடு முடிவுக்கு வருகின்றன. இது நாட்டின் தரவரிசைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகையினால் சில நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் நான் கூறியவாறு “தொடர்ச்சியான அடுத்தடுத்த IMF இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டும். 2028 ஆகும்போது இறக்குமதி 3 மாத வரையறை போலவே, ஆண்டுதோறும் வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்துவது அமெரிக்க டொலர் 2.5 பில்லியனிலிருந்து 3.5 பில்லியனாக அதிகரிக்கும். இறக்குமதி செலவோடு வெளிநாட்டு கடனும் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்குத் தேவையான டொலர்கள் நாட்டுக்கு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 மீண்டும் வங்குரோத்தடையும் அபாயம்!

எண்ணெய் விலை உயர்ந்தால் கைருப்புகள் கூட போதாது. மீண்டும் வங்குரோத்தடையும் அபாயம் காணப்படுவதனால் தொடர்ச்சியான அடுத்தடுத்த IMF இணக்கப்பாட்டிற்குச் செல்ல வேண்டும். தலைக்கன போக்கை கை விட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு மக்கள் நலன் சார்ந்த IMF இணக்கப்பாட்டை எட்டுமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். பொய்யாலும் மாயையாலும் மக்கள் எதிர்பார்ப்புகளை இனியும் குழிதோண்டி புதைக்காமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.

🟩 இப்போதாவது “அனே please வேண்டாம்” என்று சொல்லாமல் இருங்கள்

டித்வா ஏற்பட்ட சமயத்தில் சர்வதேச நன்கொடையாளர் மாநாடு கூட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தேன். அத்தருணத்தில் “அனே please வேண்டாம்” என்று கூறி அந்த வாய்ப்பை கூட இந்த தலைக்கனம் பிடித்த அரசாங்கம் இழந்து கொண்டது. இப்போதாவது தொடர்ச்சியான அடுத்தடுத்த IMF இணக்கப்பாட்டுக்குச் செல்லுமாறும், வெட்கக்கேடான அரசியலை நிறுத்தி விட்டு, மக்கள் பக்கம் நின்று நடந்து கொள்ளுமாறும், IMF இன் அடிமையாக இல்லாமல் நடந்து கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here