நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் !

0
88

இன்று (8) நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பின்வரும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

போட்டி ஏல முறையைப் பின்பற்றாமல், உள்ளூர் ஏலதாரர்களுக்கு எந்த சமமான வாய்ப்பையும் வழங்காமல், நாட்டின் காற்று மற்றும் சூரிய வளங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தல்.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தைத் திருத்துதல், கோரப்படாத முன்மொழிவுகள் மூலம் ஊழலுக்கு வழி வகுக்கும் போட்டி ஏல முறையை இரத்து செய்தல்.

கடந்த ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட CEBயின் தலைவரை நீக்காமல் இருப்பது.

இதேவேளை, புதிய சட்டத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here