நிவாரணத்தினை வைத்து தோட்ட மக்களை துண்டாட வேண்டாம் கொட்டகலை வர்த்தக சங்கம் கோரிக்கை.

0
97

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணத்தினையோ அல்லது வேறு எந்த உதவியினையோ வைத்து தோட்ட தொழிலாளர்களை துண்டாட வேண்டாம் தோட்டங்களில் வாழும் மக்கள் அனைவருமே இன்று பல்வேறு கட்டங்களின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். உரம் மற்றும் மருந்து இல்லாத காரணத்தினால் பலர் இன்று வேலை இழந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் அது மாத்திரமின்றி எமது நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் எரிபொருள் விலையேற்றம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக தோட்டத்தில் வாழும் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர் அது மாத்திரமின்றி தோட்டத்தில் இன்று கைகாசுக்கு வேலை செய்பவர்களும் ஓய்வூதியம் பெற்று மீண்டும் தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் என பலர் உள்ளனர் இந்நிலையில் இந்திய அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை தோட்டத்தில் நிரந்தரமாக வேலை செய்கின்ற அதாவது ஓய்வூதியம் உள்ளவர்களுக்கு மாத்திரம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது அப்படி என்றால் இந்த நிவாரனம் பொருட்களை வைத்து அரசியலுக்காகவும் தொழிற்சங்கத்திற்காகவும் துண்டாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
இன்று கொட்டகலையில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று தோட்டங்களை பொருத்தவரையில் பெரும்பாலான மக்கள் தோட்டங்களை வசிப்பிடமாக கொண்டாலும் சிலர் கூலி வேலை செய்கின்றனர், சிலர் பாரம் தூக்கும் தொழில்களிலும் கட்டடம் கட்டும் தொழில் ஆட்டோ ஓடுதல் என பல்வேறு வகையான தொழில்களை செய்து வருகின்றனர் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத்தொழிலாளர்களைப் போன்றே இவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் தட்டுப்பாடு காரணமாகவும் அவர்களுக்கு அந்த தொழிலை செய்ய முடியாது, சீமெந்து விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக கட்டட தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டு;ள்ளனர், இவ்வாறு பல்வேறு தொழில் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சாராருக்கு மாத்திரம் நிவாரணம் பெற்றுக்கொடுப்பது பொருத்தமாகாது ஆகவே இந்த நெருக்கடியில் எவரெல்லாம் பாதிப்படைந்து தோட்டங்களில் வாழ்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் முறையாக இனங்கண்டு அவர்கள் அனைவருக்கும் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை கொட்டகலை பகுதியில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல கருப்புச் சந்தைகள் உருவாகியுள்ளன. வெளி பிரதேசங்களிலிருந்து கொட்டகலை பகுதிக்கு வந்து வரிசையில் நின்று எரிவாயு மற்றும்; எரிபொருள்களை பெற்றுக்கொண்டு அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்துவருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் எமது பிரதேச மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பலருக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் எமது பிரதேசத்திற்கு சுமார் 700 எரிவாயு சிலிண்டர்களே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன இந்நிலையில் தற்போது 1200 வரை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதாக எரிவாயு விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்க்கும் முகமாக வர்த்தக சங்கம் என்ற ரீதியில் பொது மக்களுக்கு தேவையான எரிவாயு எரிபொருள் பெற்றுக்கொள்ள கூப்பன் முறையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளோம் இதனை கிராம சேவகர் ஊடாக பதிவு செய்து மாதம் ஒரு எரிவாயு கிடைக்கக்கூடிய வகையில் கூப்பனை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதன் மூலம் மக்கள் ஒரு மாதத்திற்கு தேவையான எரிவாயுவினை கிராம சேவகரிடம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் அதனை தொடர்ந்து கொட்டகலையில் உள்ள எட்டு எரிவாயு விற்பனை வர்த்தக நிலையங்களில் சிரமமின்றி வரிசையின் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து மக்கள் வீணாக வரிசைகளில் நிற்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்புக்கு கொட்டகலை வர்த்தக சங்கத்தினை சேர்ந்த செயலாளர் மதியழகன், உபதலைவர் பூவலி;ங்கம், உப செயலாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here