நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் 125 முறைப்பாடுகள் பதிவு
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் 125 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், எனினும் மோசமான சம்பவம் என குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் எதுவும் முறைப்பாடு செய்யப்படவில்லை என்றும் நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.
07.02.2018 அன்று நள்ளிரவுடன் முடிவடைந்த தேர்தல் பிரச்சாம் வரை சிறு சிறு முறைபாடுகளே 125 பதிவாகியுள்ளது. குறிப்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்ட்ட தேர்தல் பிரச்சாரங்களின் போது, வேட்பாளருக்கு ஆதரவு தேடி 10 பேர் மாத்திரமே செல்லாம் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்த போதிலும், தேர்தல் சட்டத்துக்கு மாறாக 10ற்கும் மேற்பட்ட நபர்கள் வேட்பாளருக்கு ஆதரவு தேடி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறான முறைபாடுகளே அதிகமாக பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸாருக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன்