நுவரெலிய மாவட்ட பிரதேச சபைகளின் வேட்பாளர், வாக்காளர் விபரங்கள் – ஒரே பார்வையில்!!

0
107

நுவரெலிய மாவட்ட பிரதேச சபைகளின் வேட்பாளர், வாக்காளர் விபரங்கள்

வலப்பனை பிரதேச சபை

இந்த சபைக்கு 33 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 22 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 85536 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு,ஜக்கிய மக்கள் கட்சி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஆகிய ஆறு (6)அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவிலுமாக மொத்தமாக 406 பேர் போட்டியிடுகின்றனர்.

ஹங்குரன்கெத்த பிரதேச சபை

இந்த சபைக்கு 24 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 16 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 73642 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி, ஆகிய நான்கு (4)அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவிலுமாக மொத்தமாக 215 பேர் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா பிரதேச சபை

இந்த சபைக்கு 14 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 9 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 48682 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய மக்கள் கட்சி,ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஆகிய நான்கு (6)அரசியல் கட்சிகளில் இருந்து 156 பேர் போட்டியிடுகின்றனர்.

கொட்டகலை பிரதேச சபை (புதிதாக உருவாக்கப்பட்ட சபை)

இந்த சபைக்கு 10 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 6 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 45423 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய மக்கள் கட்சி,ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி,லங்கா சமசமாஜ கட்சி,இலங்கை கொம்யுனிஸ்ட் கட்சி ஆகிய எட்டு (8)அரசியல் கட்சிகளில் இருந்தும் இரண்டு சுயேட்டை குழுக்களில் இருந்தும் 190 பேர் போட்டியிடுகின்றனர்.

அக்கரபத்தனை பிரதேச சபை (புதிதாக உருவாக்கப்பட்ட சபை)

இந்த சபைக்கு 9 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 6 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 43906 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,லங்கா சமசமாஜ கட்சி,ஜக்கிய மக்கள் கட்சி ஆகிய நான்கு (6)அரசியல் கட்சிகளில் இருந்தும் ஒரு சுயேட்சை குழுக்களில் இருந்தும் 116 பேர் போட்டியிடுகின்றனர்.

நோர்வுட் பிரதேச சபை (புதிதாக உருவாக்கப்பட்ட சபை)

இந்த சபைக்கு 12 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 8 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 60854 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய மக்கள் கட்சி,ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி,இலங்கை கொம்யுனிஸ்ட் கட்சி ஆகிய நான்கு (7)அரசியல் கட்சிகளில் இருந்து 161 பேர் போட்டியிடுகின்றனர்.

மஸ்கெலியா பிரதேச சபை (புதிதாக உருவாக்கப்பட்ட சபை)

இந்த சபைக்கு 10 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 6 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 37827 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி,இலங்கை கொம்யுனிஸ்ட் கட்சி ஆகிய ஆறு (6)அரசியல் கட்சிகளில் இருந்து 114 பேர் போட்டியிடுகின்றனர்.

அம்பேகமுவ பிரதேச சபை

இந்த சபைக்கு 13 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 8 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 51421 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய மக்கள் கட்சி,ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஆகிய எட்டு (8)அரசியல் கட்சிகளில் இருந்தும் ஒரு சுயேட்சை குழுவில் இருந்தும் 216 பேர் போட்டியிடுகின்றனர்.

கொத்மலை பிரதேச சபை

இந்த சபைக்கு 32 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 24 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 56 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 82139 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி,ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய மக்கள் கட்சி ஆகிய ஜந்து (5)அரசியல் கட்சிகளில் இருந்து 280 பேர் போட்டியிடுகின்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை தெரிவு செய்கின்ற சபையாக இந்த சபை இருக்கின்றது.

எஸ்.தியாகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here