மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் பட்டல்கல எட்லி தோட்டத்தில் 15 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் (16.09.2018) நேற்று இடம்பெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுசெயலாளர் எம். எஸ். பிலீப் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.