பண்டாரவளை பொரலந்த பயிற்சி பாடசாலையில் கடமையில் இருந்த போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, மேற்படி பாடசாலையின் வாயிற்பகுதியில் உள்ள காவலரணில் பாதுகாப்பு கடமையில் இருந்தபோது இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அம்பாறை பகுதியை சேர்ந்த இவரின் தற்கொலைக்கு காரணம் கண்டறியப்படவில்லை.