பதுளை,வேவெஸ்ஸை தோட்ட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த கயானி ஜெயகாந்தன், பேராதனை பல்கலைக்கழகத்தின் 87ஆவது பட்டமளிப்பு விழாவில் மனிதவள முகாமைத்துவத்தில் வணிக நிர்வாகமாணி (சிறப்பு) பட்டத்தை [Bachelor of Business Administration (Honours) in Human Resource Management] பெற்றுக்கொண்டார்.
ஜெயகாந்தன் – பிரியா தம்பதியின் புதல்வியான கயானி, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்று பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்.
வேவெஸ்ஸை தோட்ட கீழ்ப் பிரிவிலிருந்து பட்டம் பெறும் முதலாவது மாணவி என்ற பெருமையை கயானி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நேற்று (24.06.2026) இடம்பெற்ற 87ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் இவர் பட்டம் பெற்றுக்கொண்டார்.
வாழ்த்துவோம், பகிர்வோம்
RG Krishan FaceBook




