தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா, வேலை நாள் குறைப்பு, கூட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை (20) திகதி தோட்டத்தின் இந்து ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்றது, ஆர்ப்பாட்டகாரர்கள் தோட்ட சுரண்டலை உடன் நிறுத்து கூட்டு ஒப்பந்தத்தினை புதுப்பீ, அதிகாரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா பழிவாங்களை உடன் நிறுத்து, தொழிற்சங்க முறியடிப்பை உடன் நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கிய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்…..
அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட 1000 சம்பளத்தினை தோட்ட நிர்வாகங்கள் பெற்றுக்கொடுக்காது தோட்டத்தொழிலாளர்களை பல்வேறு பழிவாங்கல்களுக்கு உட்படுத்தி தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாகவும், நாள் ஒன்றுக்கு தொழிலாளர்கள் இது வரை பறித்து வந்த 16 கிலோ தேயிலைக்கு பதிலாக 20 கிலோ தேயிலை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வட்புறுத்துவதாகவும் அவ்வாறு பறிக்காதவர்களுக்கு ஒரு கிலோவுக்கு 50 ரூபா வீதி சம்பளத்தினை நிர்னையித்து வழங்குவதாகவும் இதனால் இதுவரை பெற்று வந்த சம்பளத்தினை கூட பெற முடியாது பொருளாதாரத்தில் மிகவும் கஸ்ட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் தோட்டத்தொழிலாளர்கள் மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கியிருப்பதாவும் தோட்டங்கள் தற்போது உரம் மருந்து போன்றவற்றினை பயன்படுத்தாது தோட்டங்கள் காடுகளாக மாறிவருவதாகவும் இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் தலைவர்கள் வாய் மூடி மௌனித்திருப்பதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய நடைபெற்ற குறித்த ஆர்பாட்டத்தில் கட்சி தொழிற்சங்க பேதமின்றி சுமார் 150 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்