பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

0
199

எரிவாயு விலை குறைவடைந்தால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் வெதுப்பக உற்பத்திகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக கூடி ஆராய உள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாதம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here