புதிய உலக சாதனை படைத்த இலங்கை மாணவன்~குவியும் வாழ்த்துகள்..!

0
83

குறித்த சிறுவன் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது…..அம்பாறை – நிந்தவூர் சேர்ந்த அப்துல்லாஹ் பர்வின், நப்றாஸ் முஹம்மட் ஆகியோரின் மகனான நப்ராஷ் அனீக் அகமட் என்ற 4 வயதை உடைய சிறுவன் இலங்கையில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

“100 உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காண்வதில் வேகமானவர்” என்ற உலக சாதனையை அடைந்துள்ளார்.

100 உலக நாடுகளின் கொடிகளின் பெயர்களை 1 நிமிடம் 18 வினாடிகளில் கூறி, 1 நிமிடம் 50 வினாடிகளில் அடையாளம் கண்ட முந்தைய சாதனையை முறியடித்து, சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் ஏற்கனவே நிகழ்த்திய உலக சாதனையை முறியடித்த அனீக் அஹமட், இலங்கை வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த முதலாவது சிறுவனாவார்.

இவர் பிறந்ததிலிருந்தே அதிக நினைவாற்றல், மனனசக்தி உள்ள இவர், ஒரு விடயத்தை , புலக்காட்சியை மிக விரைவில் நினைவில் வைத்திருக்ககூடியவராகவும், அதை பல நாட்களின் பின் அப்படியே சொல்லக்கூடிய திறன் உடையவராகவும் திகழ்கின்றார்.

அது மட்டுமல்லாது 20 ற்கு மேற்பட்ட அல்குர்ஆன் சூறாக்களை மனனமிட்டிருப்பதோடு , 100 ற்கு மேற்பட்ட இஸ்லாமிய கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியவராகவும் திறமை கொண்டு திகழ்கிறார்.

அது மட்டுமல்லாது வாகனங்களின் பெயர்கள், ஆங்கில சொற்களுக்கான தமிழ் பதங்கள் உடல் உறுப்புக்களின் பகுதிகள், மாதங்கள், இஸ்லாமிய துஆக்கள் என்பவற்றை மனனம் செய்தவராகவும் காணப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here