புலம் பெயர் தொழிலாளர் இனி புலம் பெயர் அபிவிருத்தி பங்களார் என அழைக்கப்படவேண்டும் என்ற ஆலோசனைக்கு அங்கீகாரம்!

0
95

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் புலம்   பெயர் தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களால் இந்தநாட்டுக்கு அனுப்பபடும் வெளிநாட்டுசெலவாணியின் தொகை தற்போது 7.3 பில்லியன் அமெரிக்கடொலர்களாக அதிகரித்திருக்கிறது.
இதுவே இந்த நாட்டுக்கு தற்போது வெளிநாட்டு செலவாணியை கொண்டுவருவதில் முதலிடத்தில் இருக்கும் தொழிற் துறையாகும். நமது நாட்டின் வரவு செலவுதிட்டத்தை தயாரிக்கும் போது கூட இந்த வருமானமே முக்கியதுறையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அண்மையில் பல அமைச்சர்கள் கூட சுட்டிக் காட்டியிருக்கியிருப்பதுடன் வெளிநாட்டு செலவாணியை கொண்டுவரும் இந்தது றைபாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அத்தோடு சுமார் 20 இலட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுசென்றிருக்கும் நிலையில் அவர்கள் உள்நாட்டில் வேலையில்லா பிரச்சனையை தீர்ப்பதிலும் பாரியபங்களிப்பை செய்கிறார்கள்.
இவ்வாறாக புலம்  பெயர் தொழிலாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் எந்தெந்த நாடுகளில் வேலை செய்கிறார்களோ அந்தநாடுகளின் அபிவிருத்திக்கும் பங்கிளிப்பு செய்கிறார்கள்.
நாட்டின் அபிவருத்திக்கு இவ்வாறான பாரியபங்களிப்பை செய்ய அவர்கள் பல்வேறு தியாகங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு சொல்லொனா துன்பங்கள், சிரமங்களுக்கு மத்தியில் நாட்;டின் அபிவிருத்திக்கு பங்களிப்புசெய்யும்
புலம் பெயர் தொழிலாளர்களை கௌரவித்து ஊக்குவித்து அங்கீகரிப்பதற்காக அவர்கள் இனிமேல் வெறுமனே புலன் பெயர் தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்டால் “புலம் பெயர் அபிவிருத்தி பங்காளார்கள்”என அழைக்கப்படவேண்டும் என்ற கருத்தை பிரிடோ நிறுவனம் அண்மைக்காலமாக வலியுறுத்திவருகிறது.

இந்தபின்னனியில் அண்மையில் பாதுகாப்பான புலம்  பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக பணிகளை முன்னெடுக்கும் எஸ் டீ. சி என சுருக்கமாக அழைக்கப்படும் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் நிறுவனத்தின் பங்காளருக்கான அனுபவப்பகிர்வு கூட்டம் அட்டன் ஹில் வியு; ஹோட்டலில் நடைபெற்றபோது புலன் பெயர் தொழிலாளர் நாட்டின் அபிவிருத்திக்குசெய்யும் பங்களிபை கௌரவப்படத்தும் வகையில் அவர்கள் இனிபுலன் பெயர் அபிவிருத்தி பங்காளரர் என்றே அழைக்கப்படவேண்டும் என்று பிரிடோ நிறுவனம் முன்வைத்த ஆலோசனைக்கு அனைத்து நிறு;வனங்களினதும் அங்கீகாரம் கிடைத்தது.

இது தொடர்பாக இந்த கூட்டத்தில் கருத்துதெரிவித்த பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம் இந்த ஆலோசனையின் நோக்கம் வெறுமனே புலம்  பெயர் தொழிலாளர்கள் எப்படி அழைக்கப்டவேண்டும் என்ற விடயத்தை மாற்றுவது அல்ல. மாறாக இந்தவிடயம் தொடர்பான பரவலாகவிழிப்புணர்வு ஊட்டுவதன் மூலம் சமூகம்,அரசு அதிகாரிகள்,கொள்கை வகுப்பாளாகள்; மத்தியில் புலம்  பெயர் அபிவிருத்தி பங்காளருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் சமூகத்தின் கௌரவமும். ஆங்கீகாரமும் மட்டுமல்ல அதற்குமேலாக அவர்களுக்கு வழங்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளின் ;தரம் உயர்த்தப்பட்டு அவர்களின் சமூக பொருளாhதார மற்றும் உளவள வாழக்கைத்தரம் மேம்படுத்தப்படுவதற்கான பரிந்துரைக்கு உதவும் என குறிப்பிட்டார்.

அக்கரப்பத்தனை நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here