பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளவிடயம் தொடர்பிலான பேச்சிவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இ.தொ.கா. தெரிவிப்பு!!

0
91

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பில் 16.12.2018. ஞாயிற்றுகிழமை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பேச்சிவார்த்தையின் மூலம் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான மருதபாண்டி ராமெஸ்வரன் தெரிவித்தார்

இன்று இடம் பெற்ற பேச்சிவார்த்தையானது முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் கனிஸ்க்க வீரசிங்க அவர்களோடும் மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையிலான பேச்சிவார்த்தை இடம் பெற்றது. ஆனால் கடந்த காலங்களிள் இடம் பெற்ற பேச்சிவார்தை இனக்கபாடு இன்றி முடிவடைந்துள்ள போதிலும் இன்றைய தினத்திற்கான பேச்சிவார்த்தையின் ஊடாக ஒரு முன்னேற்றம் காணபட்டுள்ளது.

அதேபோல் 17.12.2018; திங்கள் கிழமை பெருந்தோட்ட தொழிற்சங்கங்களோடும் கனிஸ்க்க வீரசிங்க அவர்களுக்கும் இடையில் மற்றும் ஒரு பேச்சிவார்தை இடம் பெற உள்ளது இன்றைய தினம் அவர்களுக்கு நாங்கள் சமர்பிக்கபட்ட தொகை சரிவருமாக இருந்தால் இன்னும் இரண்டு ஒரு நாட்களில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நெறுங்கிய உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு இந்தியா சென்றுள்ளதாகவும் அவர் இன்னும் இரண்டு ஒரு நாட்களில் நாடு திரும்பியவுடன் இந்த சம்பள சரிவருமாக இருந்தால் மூன்று
தொழிற்சங்கங்களும் இனைந்து கூட்டு உடன்படிக்கையில் நாங்கள் கைச்சாதிட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

நாங்கள் தோட்ட தொழிலாளர்களுடைய அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவினை முதலாளிமார் சம்மேளனம் வழங்கபட வேண்டும் என வழியுருத்தி தான் நாங்கள் பேச்சிவார்த்தையில் ஈடுபட்டு வந்ததோம் ஆனால் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் இடையில் ஐந்த சுற்று பேச்சிவார்த்தைகள் இடம் பெற்ற
போதும் இந்த பேச்சிவார்த்தைகள் தோல்வியிலே நிறைவடைந்தது.

அதன் பிறகு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கமைய மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களால் கடந்த எட்டு நாட்களாக பணிபுரக்கனிப்பில் ஈடுபட்டு ஒரு அழுத்தத்தை கொடுத்தமை காரணமாகவே இன்றைய தினம் பெற்ற பேச்சிவார்த்தையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்
மேலும் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here