போதையில் கார் ஓட்டிய வார்னருக்கு அபராதம்!

0
6
dailythanthi

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் 39 வயதான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் பிக்பாஷ், பாகிஸ்தான் பிரிமீயர் லீக் போன்ற போட்டிகளில் விளையாடி வருகிறார். சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் குடித்து விட்டு கார் ஓட்டிய போது. போக்குவரத்து போலீசாரின் சோதனையில் சிக்கினார். பரிசோ தனையில் அவர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியது உறுதியானது. இது தொடர்பான வழக்கு உள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது வார்னர் போதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் வார்னருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன் அவர் கார் ஓட்ட வேண்டும் என்று விரும்பினால், இன்டர்லாக் கருவியை தனது காரில் பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here