மக்களுக்கு நாட்டை நேசிக்கும் கலாச்சாரத்தை கற்பிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்! : பிரிடோ நிறுவனம்

0
105

பெரும்பான்மை மக்களுக்கும் நாட்டை நேசிக்கும் கலாச்சாரத்தை கற்பிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நாட்டை நேசிப்பது ஒரு கலாச்சாரமாக மாற வேண்டும். சுதந்திர தினத்தை அர்த்தமுடன் கொண்டாடுவோம்.

தேசிய கீதத்தை கூட தமிழில் பாட முடியாத நிலையில் இந்த நாடு இருந்தது.

இதன் காரனமாக நாம் நமது நாடு என்று சொந்தம் கொண்டாடும் உணர்வு நமக்கு இருக்கவில்லை.

ஆயினும் இந்நிலையில் தொடர்ச்சியாக மாற்றம் ஏற்பட்டு கடந்த சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது நமக்கு ஒரு உணர்வுபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை நெகிழ வைத்ததோடு எம்மை அடையாளம் காட்டியது’ நமது நாட்டு அரசியல் வாதிகள் நாட்டை நேசிக்கும் உணர்வை ஏற்படுத்தவில்லை என்பது உண்மையானாலும் இந்த நாடு நமது நாடு என்ற உண்மையை நம்மால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஏனென்றால் நாம் இங்கே தான் வாழ்கிறோம். தொழில் செய்கிறோம். குடும்பம் நடத்துகிறோம். மரணிக்கிறோம்.

இன்று எங்கு பார்த்தாலும் அரசில்வாதிகள், மதத்தலைவாகள், புத்திமான்கள் மூலமே நாடு அழிகிறது.

நாட்டின் வளங்கள் அழிகின்றன. நாட்டிற்கு எதிர்காலம் இலலை. வங்கிகள் வங்குரோத்து அடைகின்றன. நாட்டை விற்கிறார்கள். நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்று நாட்டைப்பற்றி முழுநாளும் தீயதையும் அசுபமானவற்றையுமோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக நாட்டில் அரைவாசிக்கும் மேலானவர்கள் நாட்டைப் பற்றி தீயதையே சொல்லிக்கொண்டிருப்பது ஒரு கலாச்சரமாக மாறிவிட்டிருக்கிறது.

பாடசாலை தொடங்கி அனைத்து இடங்களிலும் கூட அதே நிலைமை தான். நாட்டில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் நாட்டைப்பற்றி தீயதையோ சொல்லிக் கொண்டிருந்தால் நாடு எப்படி நன்றாக இருக்க முடியும்?

நாடு செழிக்க வேண்டும் என பெரும்பான்மையானோர் மனதார விரும்பாத போது நாடு எப்படி செழிக்கும்?.
நாட்டுக்கும் அரசியல் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் எதிர்பக்க கட்சியில் இருப்பதால் நாட்டை வெறுக்கும் கலாச்சாரமே மேலோங்கி இருக்கிறது.

மக்கள் நாடு நலம் சாhந்தவர்களாக இல்லாமல் கட்சி நலம் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். நாடு முழுவதிலும் ஏன் தோட்டங்களிலும் கூட இதே நிலை தான் காணப்படுகிறது.  இந்த பின்னனியில் நாம் தீயதை பேசும் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்.

நல்லதை பேசும் கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும். நாட்டைப்பற்றி நல்லது பேசினால் நல்லது நடக்கும் என நாம் நம்ப வேண்டும்.

நாம் எந்த இனத்தை சாந்தவர்களாக இருந்தாலும் எந்த மொழி பேசினாலும் இது நமது நாடு, என்ற உணர்வுடன் இவ்வருடம் சுதந்திர தினத்தினை கொண்டாட வேண்டுமென பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம் கேட்டுகொண்டார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here