மக்களே விழிப்பாயிருங்கள்: பொலிஸார் எச்சரிக்கை

0
109

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் உங்களுடைய விடுமுறைக் காலத் திட்டங்களை முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

திட்டமிட்டு திருடும் கும்பல், அவ்வாறான தகவல்களை வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹல் தல்டுவ தெரிவித்தார்.

ஆகவே, தங்குமிடங்கள், பயணத் திட்டங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தளங்களில் மக்களைப் பகிர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு வீட்டிலிருந்து வெளியேறுபவர்களை தங்கள் வீட்டிலுள்ள சிசிடிவி கமராக்களை இயங்கச் செய்துவிட்டு வெளியேறுமாறும் படக்காட்சிகளை அடிக்கடி கண்காணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here