மணல் ஏற்றிவந்த பாரஊர்தி பொகவந்தலாவையில் விபத்து!!

0
180

மணல் ஏற்றவந்த பாரஊர்தி  விபத்து.

பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் சம்பவம்

மையங்கன பகுதியில் இருந்து பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்க்காக மணல் ஏற்றி வந்த பாரஊர்தி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 02.02.2018 வெள்ளிகிழமை விடியற் காலை 05.30மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

IMG-20180202-WA0004 IMG-20180202-WA0005

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸார் பாரஊர்தியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையே இந்த விபத்துக்கான காரணமென பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here