உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் தாயும் அதனை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேருவளை – சமட் மாவத்தையில் வசிக்கும் 28 மற்றும் 24 வயதுடைய திருமணமான தம்பதியரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மனைவி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியின் உடல் தீப்பிடித்து எரிந்த போது தீயை அணைக்க முயன்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.