மத்திய மாகாண சாகித்திய விழாவில் அரசியல் கிடையாது; அது எமது கலாசார நிகழ்வு மாகாண அமைச்சர் ராமேஸ்வரன்!

0
113

அரசியல் இல்லாமல் முழுமையாக கலை கலாச்சார நிகழ்வுகளை மையப்படுத்தியே மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நடைபெறுகின்றது.அழைப்பிதழ் அனைவருக்கும் பொதுவாகவே அனுப்பிவைக்கப்படுகின்றது.இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை என மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (03.10.2017) நுவரெலியா காரியாலயத்தில் நடைபெற்றது.இதில் மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல்,பிலிப்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா ஒக்டோபர் மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் (சினிசிட்டா)நடைபெறவுள்ளது.
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன்
வழமை போலவே மத்திய மாகாண சாகித்திய விழாவிற்கு பாரிய அளவில் மத்திய மாகாணத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை.ஆனாலும் நிதி இல்லை என்ற காரணத்திற்காக இதனை நிறுத்தி விடவும் முடியாது.எங்களுடைய கலை கலாச்சாரத்தை பேணி பாதுகாக்கின்ற கடமை நமக்கு இருக்கின்றது.எனவே நாம் இதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.கடந்த காலத்தில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் இதனை செய்துவந்திருக்கின்றார்கள்.என்னுடைய தலைமையில் நடைபெறுகின்ற இரண்டாவது சாகித்திய விழாவாக இது அமைந்துள்ளது.

எங்களுடைய இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவில் இலங்கை;கு வருகின்ற பொழுது அவர்களுடன் அங்கிருந்து கொண்டு வரப்பட்டது இந்த கலை கலாச்சாரங்கள் எனவே இதனை பாதுகாக்க வேண்டும்.அதனை பாதுகாக்க வேண்டுமானால் இவ்வாறான கலை கலாச்சார நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை.அதற்கான ஒரு களம் அமைக்கப்பட வேண்டும்.

ஒரு சமூகம் வாழ்ந்ததற்கான அடிப்படை விடய்ஙகளே அவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான நிகழ்வுகள் மற்றும் அந்த நிகழ்வுகளில் வெளியிடப்படுகின்ற மலர்.இவை எதழர்காலத்தில் ஒரு ஆவணமாக திகழும்.எனவே இதனை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கின்றது.
சாகித்தி விழாவை பொறுத்த அளவில் முதல் நாள் நிகழ்வுகளை பொறுத்த அளவில் இரண்டு அரங்கம் பெயரிடப்பட்டுள்ளது.முதலாவது அரங்கமாக மறைந்த அமரர் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனை நிறைவு கூறுகின்ற வகையில் சந்திரசேகரன் அரங்கம் பெயரிடப்படுகின்றது.இரண்டாவது அரங்கமாக செந்தூரவேல் அரங்கம் பெயரிடப்படுகின்றது.இரண்டாவது நாள் முதலாவது அரங்கம் திருமதி சந்திரகுமாரி கணபதி எனவும் இரண்டாவது அரங்கம் முருகேசு சுவாமிகள் அரங்கம் எனவும் பெயரிடப்படுள்ளது.எனவே இவை அனைத்துமே அரசியலுக்கு அப்பால் சென்றே முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த சாகித்திய விழாவில் முதலாவது நாள் நிகழ்வுகளில் மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலுக ஏக்கநாயக்க இந்திய உதவி தூதுவர் ராதா வெங்கடராமன் ஆகியோரும் இரண்டாவது நாள் நிகழ்வுகளில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.
வுpழாவில் தமிழர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.இந்த வருடம் 25 பேர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.இதற்கு எங்களுக்கு சுமார் 100 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.அதற்காக ஒரு குழுவை அமைத்து மிகவும் சுயாதீனமான முறையில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் எழுத்தாளர்கள்,சமூக சேவையாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் உள்ளடங்குகின்றனர்.

இன்றைய எமது சமூகம் படிப்படியாக எமது கலைகளை மறந்து வருகின்றார்கள்.எனவே அவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த விழா முன்னெடுக்கப்படுகின்றது எனவும் மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா எஸ்.தியாகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here