மலையகத்தில் இன்று ஆற்றல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் உயர்ந்திருக்கின்றார்கள்.

0
97

சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும் இந்த சர்வதேச அன்னையர் தினத்தினையொட்டி நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன மலையகப்பகுதிகளிலும் சர்வதேச அன்னையர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று (08) திகதி நடைபெற்றன.

அன்னையர்களை கௌரவிக்கும் முகமாக பிரிடோ நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச அன்னையர் தினம் வெளிநாட்டு செலவாணியினை பெற்றுக்கொடுக்கும் அன்னையர்களுக்கு உரிமையை வழங்கு எனும் தொனிப்பொருளில் டிக்கோயா நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அன்னையர்கள் மகிழ்வுரும் வகையில் அவர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ‘அந்நியச் செலவாணியினை பெற்றுத்தரும் அன்னையரின் பாதுகாப்பை உறுதி செய்’ ‘தாய்மார்களின் உரிமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.’ :குடும்ப வலுத்திட்டத்தை நடைமுறை படுத்து போன்ற வாசகம் எழுதிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு கோசமிட்டனர்.

இந்நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் சந்திரசேகரம் கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் இன்று ஆற்றல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் உயர்ந்திருக்கின்றார்கள் அவர்கள் மேலும் மேலும் உயர் வேண்டும் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை இந்த சமூகத்தில் பிறந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து சர்வதேசம் பேசும் அளவுக்கு இன்று உயர்ந்துள்ளார்கள் இது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விடயமே. ஆனால் இன்று அன்னையருக்கு வாழ்த்து சொல்லும் இந்த நாளிலே அன்னையருக்கு ஆபத்து இருக்கின்றது என்று சொல்ல கவலையாக இருக்கின்றது.

இன்று சமையலறையிலே போராட்டம் என்ன செய்தாலும் அம்மா தான் சமைக்க வேண்டும் ஆனால் இன்று அவர்களுக்கு பிள்ளைகளுக்கு சமைத்து கொடுப்பதற்கு பொருட்கள் இல்லை, அரிசி இல்லை சீனி மாவு இல்லை கேஸ் இல்லை மண்ணெண்ணை இல்லை இன்று எந்த பொருளை எடுத்தாலும் இல்லாத நிலையே உள்ளன ஆகவே சமையலறைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். கேஸ்ஸினை திறக்கும் போது பயம் வீட்டுக்கு குண்டை அனுப்பும் அளவுக்கு இந்த அரசியல் வாதிகள் முட்டாள் தனமாக செயப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் எவ்வாறு அன்னையர்கள் சுதந்திரமாக இருப்பார்கள்? அன்னையர்கள் இன்று தங்களது உயிரை கையிலே பிடித்து வாழ்கின்ற நிலை இன்று மாறியிருக்கின்றது. இன்று சீனிக்கு வரிசை, சிறு குழந்தை தனது பசியினை போக்கிக்கொள்ளும் பால்மாவுக்கு வரிசை எதையெடுத்தாலும் அன்னையர்கள் வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலைக்கு இந்த முட்டாள் அரசியல் வாதிகள் நாட்டை தள்ளியுள்ளார்கள். சரியா அது கூட பரவாயில்லை அன்னைக்கு சுகமில்லை என்று வைத்தியசாலைக்கு சென்றால் மருந்து இல்லை. ஆகவே இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து அன்னையர்களுக்கும் ஆபத்து என்று தான் கூறவேண்டும். இன்று ஆபத்தான ஒரு கலாசாரமே உருவாகியுள்ளன இதனை பேசிக்கொண்டிருக்க முடியாது இதனை மாற்றியமைக்க வேண்டும்.

அன்னையர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அன்னையர்களாக வருகின்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சமூகத்தில் இருக்கின்றவர்கள் வாழ வேண்டும் இன்று வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. வாழ்வதற்கான சுதந்திரம் தடுக்கப்பட்டிருக்கின்றது. இன்று அரசியல் ரீதியாக எமது பெற்றோர்கள் விட்ட பிழை காரணமாக இன்று இளைஞர்கள் அதனை மாற்றுவதற்கு போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் உயிரை மாயித்து பசி பட்டினியில் இருக்கிறார்களே அதற்கு காரணம் அன்னையர்கள் மற்றும் பெற்றோர்கள் முட்டாள் தனமாக இருந்ததன் விளைவாகத்தான் இன்று இந்த நிலை உருவாகியுள்ளது. இந்த சமூகத்தை எடுத்துக்கொணடால் இன்று எம் மத்தியில் இருக்கின்ற அரசியல் கலாசாரம் சரியானதா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும் ஆகவே அன்னையர்கள் அரசியல் ரீதியான அறிவினை பெற்று நாட்டில் நடக்கின்ற மாற்றங்களை உணர்;ந்து செயப்படுவதன் மூலம் தான் ஒரு சுதந்திரமான அன்னையர் தினம் கொண்டாடுவதற்கு நிலை உருவாகும் என அதற்கு அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

மலைவாஞ்ஞன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here