மலையக இளைஞர்களின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சட்டத்தரணியும் முன்னாள் எம்பியுமான விநாயகமூர்த்தி காலமானார்!

0
103

80களின் இறுதியில் மலையகத்தில் இருந்து கைதான இளைஞர்களுக்கு எந்தவித சலிப்பும் இன்றி அவர்களின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று காலமானார்.
1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பிறந்த இவர் தனது 84 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக பதவி வகித்த இவர். கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் தலைவரானார்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன் 2001 ஆம் ஆண்டில் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் இறங்கியதும் அக்கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகினார்.

2001 ஆம் ஆண்டு தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியதுடன் தமிழ்க் காங்கிரசும் விலகியது.

எனினும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து அங்கம் வகித்ததுடன். 2010 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here