எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திலிருந்து இவ்வாறு மின் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய மின்கட்டணமானது 69 வீதத்தினால் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், மின்சார கட்டணத்தை 130 வீதத்தினால் அதிகரிக்குமாறு மின்சார சபை கோரியிருந்த போதிலும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு சலுகை வழங்கும் விதமாக குறைந்த அளவில் இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.