மீட்பரின் துணையால் பொருள் ஆதாரம் பெற்று மீழுவோம் எனும் தொனிப்பொருளில் டிக்கோயாவில் ஒளிவிழா

0
98

மீட்பரின் துணையால் பொருள் ஆதாரம் பெற்று மீழுவோம் எனும் தொனிப்பொருளில் டிக்கோயாவில் நுண்னலைக்கல்லூரியில் ஒளிவிழா நிகழ்வு பாடசாலையின் அதிபர் மூ.மூவேந்தன் தலைமையில் சர்மத பங்களிப்புடன்  இன்று 21 ம் திகதி காலை மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஒளிவிழா நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் வாழ்த்து மடல், கொட்டில் அமைத்தல்,மனனப்போட்டி,உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான அன்பியம் என்ற நூல் நாக்காவது தடைவையாகவும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதே வேளை டிக்கோயா தம்ழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் சிவனு மனோகரன் அவர்களுக்கு கொடகே புத்தாகசாலையின் தேசிய புத்தக விருதில்  பெற்றமையக்காக அவருக்கு பாடசாலை சமூகத்தால் பொன்னாடை அனுவித்து கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு மதிய உணவும் வழக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ்,பௌத்த,இஸ்லாம் மதத்தலைவர்கள் உட்பட ஹட்டன் வலயக்கல்விப்பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அருட் தந்தை நிவ்மன் பீரில் பௌத்த மதகுரு இஸ்லாம் மதத்தலைவர்களும் உரையாற்றினர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here