மீண்டும் இலங்கையில் ஆட்டம் காணும் கொவிட்-19- பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

0
175

கேகாலை மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து குறித்த கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 671,903 ஆகும்.

அத்துடன், நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கொவிட் -19 இன் உலகளாவிய ஆபத்து குறித்து இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here