முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற விரும்பும் நாதன் லியொன்!

0
154

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியொன் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனை பெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் ஜூலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இத் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சிற்காக முரளிதரனிடம் பயிற்சிபெறவுள்ளதாக நாதன் லியொன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவுஸ்திரேலிய வலைத்தளம் ஒன்றுக்கு செய்தி வெளியிட்ட நாதன் லியொன், ‘ இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என முரளி தெரிவித்துள்ளார். அதனால் நான் முரளியிடம் பந்துவீச்சுப் பயிற்சிகளைப் பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எமக்கு அவரின் ஆலோசனைகளைப் பயிற்சிக்களத்தில் பெறமுடியும் என்றால் அது நன்றாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 28 வயதான நாதன் லியொன் தற்போது வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 32.87 என்ற பந்துவீச்சு சராசரியில் 195 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

200 விக்கட்டுகளைக் கைப்பற்றுவதற்கு இன்னும் 5 விக்கட்டுகள் தேவை என்ற நிலையில் இலங்கை தொடரில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றுவதன் மூலம் 200 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாவது அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது முக்கிய விடயமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here