ராகுல் காந்தி முன்பாக அதைச் சொன்னார் விஜய் – ஆதரவாளர்கள் ஆர்ப்பரிப்பு!

0
32
Image - hindutamil

தமிழக முதல்- அமைச்சராக பதவியேற்ற தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தந்த கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

வெள்ளை சட்டை, கருப்பு கோட், கருப்பு பேன்ட் அணிந்தபடி முதல்வர் விஜய் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. அவருக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், முதன் முதலில் ஆதரவு கரம் நீட்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் தான்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு பிரயத்தனத்திற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் என தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து விஜய்யை முதல்-அமைச்சராக பதவியேற்க கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்விவிழாவில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிந்தார்.

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர் , நடிகைகள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டிருக்க, ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்..’ அவர் தனது உரையினை ஆரம்பித்த போது நேரு அரங்கம் நிறைந்திருந்த ஆதரவாளர்களின் சத்தத்தினால் அதிரத் தொடங்கியது.
எப்படியோ பதவியேற்பு விழாவில் கேட்கக் காத்திருந்த அந்த வார்த்தையை முதல்வர் விஜய் கூறியதே போதும் என்ற ஆர்ப்பரிப்பில் ஆதரவாளர்கள்  கொண்டாடி வருகின்றன.
எது எப்படியோ தமிழகத்தில் புதிய ஆட்சி நல்லாட்சியாக மலரட்டும்! தமிழ் நாட்டு மக்களின் எண்ணங்கள் நிஜமாகட்டும் என கருடன் சார்பில் வாழ்த்துகிறோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here