பிரித்தானியர் இலங்கையையும் இந்தியாவையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்திருப்பின் இலங்கையில் மலையகத்தமிழர் என்ற ஒரு இனக்குழு உருவாகியிருக்க முடியாது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை, மலேசியா, மொரிசியஸ், மற்றும் மேற்கிந்திய தீவுகள், கயானா உட்பட பிஜி தீவுகளிலும் அழைத்துச்சென்று குடியேற்றினர். எனினும் இலங்கை மற்றும் மலேசியாவில் மட்டுமே குடியேற்றப்பட்ட தமிழர்கள் மட்டுமே தமது கலாசார விழுமியங்களை இன்றும் கைவிடாமல் பாதுகாத்து வருகின்றனர், மொறிசிஸில் மற்றும் கயானாவில் தமிழை அவர்கள் நேசித்தாலும் இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் தெரியாது. ஆனால் இலங்கையிலிருந்து பல லட்சக்கணக்கான மலையக தமிழர்களை நாடு கடத்தப்பட்டபோதிலும் தமது தனித்துவத்தை எப்போதும் கைவிட்டதில்லை. அங்கு தனித்துவ கலாசார விழுமியங்கள் இன்றும் அப்படியே உள்ளது. அவர்களின் வாழ்வியல் தொடர்பாக பல்வேறு படைப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையாக இருந்த ஒரு இனம் இன்று நான்காம் இடத்தில இருந்தாலும் தனித்துவம் பேணப்படுகின்றது. எம்மை இலங்கைக்கு அழைத்துவந்த பிரித்தானியர்கள் தலைநகரில் எமது எழுத்தாளர்களின் 26 படைப்புகளை முன்வைத்து இலக்கிய மாநாடு மற்றும் ஓவியக்கண்காட்சி என நாளை இடம்பெறுகின்றது. லன்டனில் இதற்கு முன்னர் மலையக எழுத்தாளர்களின் பல நூல்கள் வெளியீட்டுவிழா இடம்பெற்றபோதும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது. கோகுலம் சுப்பையா,இர சிவலிங்கம், பேராசிரியர் சோ சந்திரசேகரம் , மற்றும் தமிழோவியன், சி வி வேலுப்பிள்ளை, சாரல்நாடான போன்றவர்களின் நினைவரங்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த போராசிரியர் மு . நித்தியானந்தன் மற்றும் ஹென்றி விக்கிரமசிங்க போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இந்த நிகழ்வில் அடியேனின் “வெந்து தணியாத பூமியும் இடம்பெறுவதில் பெருமையடைகின்றேன் இந்த விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்!
வரதன் கிருஸ்ணா.