லிந்துலையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாத நிகழ்வு இடம்பெற்றது! !!

0
106
லிந்துலை  பொது சுகாதார  பிரிவுக்கு  உட்பட்ட  ராணிவத்தை  கிராம சேவகர் பிரிவு,இல்டன்னோல் கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த  கர்ப்பிணி  தாய்மார்களுக்கான  மார்பக புற்று நோய்  பற்றிய  விழிப்புணர்வு  செய்யப்பட்டது.
ராணிவத்தை  கிராம சேவகர் பிரிவு  குடும்ப நல  உத்தியோகஸ்தர்  நிர்மலா தலைமையில்  இந்நிகழ்வு இடம்பெற்றது.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய ஒரு  விளக்கத்தை  குடும்ப நல உத்தியோகஸ்தர் நிர்மலா பின்வருமாறு  எடுத்துரைத்தார். ..
உலக சுகாதார அமைப்பு 1985 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 1 முதல் 31 ஆம் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்பு ணர்வு மாதமாக அறிவித்தது. நடப்பு மாதமான அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பக புற்று நோய் கடைப்பிடிக்கப் படுகிறது.
அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். இது ஆண்டுதோறும் மார்பகப் புற்றைப் பற்றிய அறிவை மக்களுக்குப் புகட்டும் ஓர் பிரச்சார இயக்கம் ஆகும். மார்பகப் புற்று, பரவலாகக் காணப்படும் ஒரு புற்று நோய். இலங்கை  உட்பட உலகம் முழுவதும் இந்நோய் ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சியே இந்நோயின் தன்மை. மார்பகத்துக்குள் கட்டியாக உருவாகும் இது சிகிச்சை அளிக்கக் கூடிய ஒரு புற்று நோய் வடிவமாகும். ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்காவிட்டால் உடலின் பிற பாகங்களுக்கும் பரவி இந்நோய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றும்
நிகழ்வில் கலந்து கொண்ட
லிந்துலை  பொது சுகாதார பிரிவு வைத்திய அதிகாரி  வைத்தியர்   ரேஷ்ணி பின்வருமாறு உரையாற்றினார்..
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் மார்பகப் புற்றுநோய் பெண்களைப் பாதிக்கிறது. இது எந்த வயதிலும் ஏற்படும். ஆனால் பெரும்பான்மையும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இது காணப்படுகிறது. இலங்கையில்  பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வகைப் புற்றுக்களிலும்  மார்பகப் புற்றே. மார்பகப் புற்று உருவாகும் சராசரி வயது விகிதம் 50-70 ஆண்டுகளில் இருந்து 30-50 ஆண்டாக மாறியுள்ளது என்றும்  தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லிந்துலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட  குடும்ப நல உத்தியோகஸ்தர்கள் ,கர்ப்பிணிப்  தாய் மார்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி  கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here