லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2000 பேர் பலி

0
108

லிபியாவில் ஒருபுறம் ஆயுதப் படைகளின் கிளர்ச்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வட ஆபிரிக்காவின் மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ஏற்படுத்திய சோகம் மறைவதற்குள், மற்றுமொரு வடஆப்ரிக்க நாடான லிபியாவில் வெள்ளம் காரணமாக 2000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லிபியாவில் டேனியல் சூறாவளியின் தாக்கம் காரணமாக டெர்னா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் 5 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

லிபியாவில் ஒருபுறம் ஆயுதப் படைகளின் கிளர்ச்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டெர்னா நகரை டேனியல் புயல் தாக்கியது.அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்ததால் டெர்னா நகரம் நீரில் மூழ்கியதாகவும், பெரிய பாலங்கள், உயரமான கட்டிடங்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டேனியல் புயல் தீவிரமடைந்துள்ளதால், டெர்னா, ஜபல் அல் அக்தர், அல்-மர்ஜ் உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்து வருகிறது.தாழ்வான பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர்.

இதனிடையே டெர்னா நகரில் ஆற்றின் மீது அணை இடிந்து விழுந்தது பேரழிவை ஏற்படுத்தியதாகவும் கரையோரப் பகுதிகளில் பலத்த சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் லிபிய தேசிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மிஸ்மாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here