கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் வட்டகொட புகையிரத நிலையத்திற்கருகில் ஒரு பாய்ந்து பலியானதாக தலவக்கலை பொலிஸார் தெரிவித்தனர்
தலவாக்கலை வட்டகொட புகையிரத ரயில் நிலையத்தில் 26.06.2018 மதியம் 12 .30 மணியளவிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத குறித்த நபர் வட்டகொடை ரயில் நிலையத்தில் பொடிமெனிக்கே ரயில் நிறுத்த முற்பட்டபோதே ரயிலின் முன் பாய்ந்துள்ளதாக ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார். பலியானவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்