பெருந்தோட்ட நிர்வாகத்திற்குட்படாத காசல்ரி கடைவீதி வாழ் குடியிருப்பாளர்களையும் காசல்ரிகிராம வாழ் குடியிருப்பாளர்களையும் நோர்வூட் பிரதேச சபை நிர்வாகத்திற்குள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் உரிமை சார் விடயங்களை முன்னெடுக்க நோர்வூட் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் காசல்ரி நீர்தேக்க அணைக்கட்டு அமைக்கப்பட்டதையடுத்து நீர்தேக்கத்தின் நீரில் மூழ்கட்டிக்கப்பட்ட சமுத்திரவள்ளி நகர வாழ் மக்களின் 5 வது பரம்பரையினரே தற்போது காசல்ரி நிர்தேக்கத்தை அன்மித்த காசல்ரி கடைவீதி மற்றும் காசல்ரி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர் என நோர்வூட் பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்நோர்வூட் பிரதேச சபையின் ஜூன் மாதத்திற்கான மாதாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.25.06.2018 காலை புள்ளியாவத்தை நகர கலாசார மண்டபத்தில் நோர்வூட் பிரதேச சபையின் உப தவிசாளர் தங்கராஜ் கிசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற சபையமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்
அன்மைகாலமாக சீரற்ற வானிலையினால் பெருந்தோட்ட பகுதியில் அணர்த்ததை ஏற்படுத்தவள்ள மரங்களினால் உயிருக்கும் உடைமைகளுக்கும் உத்தரவதமற்ற நிலை தோன்றியுள்ளது.ஆகவே அவ்வாறான மரங்களை வெட்டி அகற்ற சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் காசல்ரீ கடைவீதி வாழ் குடியிருப்புகளை அன்மித்த பகுதியில் உயர்ந்த வளர்ந்து காணப்படும் அணர்த்ததை ஏற்படுத்தும் வகையிலுள்ள மரங்களை வெட்டியகற்ற சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்தோடு நீர்வளம் நிறைந்த மலையகத்தில் முறையான நீர் வினியோகத்திட்டம் இன்மையால் இன்றுவரை குடி நீர் பிரச்சனைகளை எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் காசல்ரி கடைவீதி மற்றும் காசல்ரி கிராம வாழ் குடியிருப்பாளர்களுக்கு முறையான சுத்தமான குடி நீர் வினியோகத்தை பிரதேச சபையூடாக முன்னெடுக்க வேண்டும் மேலும் இயற்கை அழகை கொண்ட காசல்ரி பிரத்சத்தில் உள்ளசப் பயணிகளை கவரும் வகையி ல் அமையப்பெற்றுள்ள உள்ளச விடுதிகளுக்கு உள்ளச பயணிகளை அதிகளவில் வருகைத்தருகின்றனர்.
போதும் குறித்த பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் அப்பகுதி வாழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் எனவே குறித்த பகுதிகளுக்கு வீதி மின் விளக்குகளை பொருத்த சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எஸ் .சதீஸ்