வட்டவலை மீனாட்ச்சி தோட்டமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் கண்டு கொள்ளதாக நோட்டன்பிரிஜ் மின்சாரநிலையம்
வட்டவலை மீனாட்ச்சி தோட்டமக்கள் வாழும் 06ம் இலக்க குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள மின்சார கம்பம் ஒன்று உடைந்து லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மேல் செல்லுகின்ற மின்கம்பிகளும் வயர்களும் லயன் கூறையின் தரைமட்டத்தில் தொங்கும் நிலையில் காணபடும் சம்பவம் தொடர்பில் நோட்டபிரீஜ் மன்சார நிலைய உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்து போதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்கில் செயல்படுவதாக வட்டவலை மீனாட்ச்சி தோட்டமக்கள் குற்றம்சுமத்துகின்றனர் .
இந்த தோட்டத்தில் உள்ள 06ம் இலக்க லயன்குடியிருப்பிற்கு மேல் செல்லுகின்ற மின்கம்பிகளும் வயர்களும் லயன் கூறையின் தரைமட்டத்தில் தொங்கும் நிலையில் காணப்படுவதால் எந் நேரமும் எங்கள் உயிருக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் மென இம் மீனாட்ச்சி தோட்டமக்கள் அஞ்சிகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நோட்டன் பிரீஜ் மின்சார நிலையத்திற்கு பலமுறை அறிவித்த போதும் குறித்த மின்சார நிலையத்தின் உள்ள உத்தியோகத்தர்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கபட வில்லையென அம் மக்கள் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த லயன் குடியிருப்பில் மாத்திரம் சுமார் 28குடும்பங்கள் வசிக்கும் இந்த லயன் குடியிருப்பில் வாழுகின்ற மக்களுக்கு மின்சார கம்பங்களையும் கம்பிகளையும் சீர் செய்து தருவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென வட்டவலை மீனாட்ச்சி தோட்டமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர் .
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்