வாடிக்கையாளர்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

0
89

நாட்டில் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நாளைய தினம் 2 எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மற்றொரு கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதுடன், இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here