விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த செய்தி!

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.பீஸ்ட் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே வெளியான போஸ்டர்களும், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் ரசிகர்களைக் குஷியாக்கின. இந்நிலையில் தீபாவளியில் இருந்தே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் இதுவரை ரிலிஸ் ஆகவில்லை.

இந்நிலையில் முதல் பாடலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் படக்குழு முடிவு செய்து அதற்காக பாடலின் மிக்ஸிங் பணிகளை எல்லாம் முடித்து தயாராக வைத்திருந்ததாம். ஆனால் இப்போது கொரோனா உருமாறிய வைரஸான ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த படக்குழு இப்போது ரிலீஸ் செய்யவேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்த படமும் இன்னும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.