வெல்லவாய வாகன விபத்தில் மூவர் பலி

0
177

வெல்லவாய – தனமல்வில வீதியில், யாலபோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு, வெல்லவாய பகுதியில் இருந்து, தனமல்வில நோக்கிப் பயணித்த கெப்ரக வாகனம் ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற, அதன் சாரதியான பொலிஸ் அலுவலரும், பின் இருக்கையில் பயணித்த அவரது மனைவி மற்றும் தந்தை ஆகிய மூவரும் மரணித்தனர்.

விபத்து தொடர்பில், கெப் ரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், மதுபோதையில் வாகனம் செலுத்தியிருந்ததுடன், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர் என விசாரணையில் தெரியவந்துளளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here